தேனி பத்ரகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2945 days ago
தேனி: தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பத்ரகாளி அம்மன் கோயில் பராமரிப்பு குழு சார்பில், பத்ரகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங் கியது. நேற்று மாலை நடந்த கொலுவில் அம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார். நவராத்திரி கொலுமண்டப திறப்பு விழாவில் நாடார் சரஸ்வதி விடுதி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கோயில் பராமரிப்புக்குழு தலைவர் முருகன், பொதுசெயலர் ராஜமோகன், பொருளாளர் ஜவஹர், தேவஸ்தான செயலர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.