காய்கறி அலங்காரத்தில் கன்னிகாபரமேஸ்வரி
ADDED :2934 days ago
ராசிபுரம்: நவராத்திரி விழாவில், ராசிபுரம், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். புரட்டாசி மாதம், 5ல், நவராத்திரி விழா தொடங்கியது. இதை கொண்டாடும் வகையில், வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். கொலு தொடங்கிய மூன்றாம் நாளான நேற்று, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கொலு வைத்து வழிப்பட்டனர். விழாவில் அம்மன், காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.