உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவிலில் 9ம் ஆண்டு உற்சவம்

ராமர் கோவிலில் 9ம் ஆண்டு உற்சவம்

கருமந்துறை: கருமந்துறை அருகே, கிளாக்காட்டில் உள்ள ராமர் கோவிலில், வரும், 27ல், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர் சுவாமியின் ஒன்பதாம் ஆண்டு உற்சவம் தொடங்குகிறது. காலை, 9:00 மணிக்கு சக்தி அழைத்தல், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. 28 காலை, பால்குட ஊர்வலம், மாலை, உற்சவமூர்த்தி ஊர்வலம்; 29 காலை, பொங்கல் வைத்தல், இரவு, ஊஞ்சல் சேவை; 30 காலை, உற்சவ மூர்த்தி ஊர்வலம், இரவு, 10:00 மணிக்கு, பூ பல்லக்கில் சுவாமி ஊர்வலம், கரகாட்டம் நடக்கிறது. அக்., 1 காலை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !