உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா புஷ்கர விழா: பக்தர்கள் நீராடி வழிபாடு

மஹா புஷ்கர விழா: பக்தர்கள் நீராடி வழிபாடு

மேட்டூர்: மேட்டூர் காவிரியாற்றில், பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். மஹா புஷ்கர விழா நிறைவு நாளான நேற்று, மேட்டூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள், சுவாமி திருமேனிகளை காவிரியாற்றுக்கு எடுத்துச்சென்று பூஜை செய்து, ஊர்வலம் எடுத்து வந்தனர். ராமன் நகர் பக்தர்கள், ஊர்வலம் வந்து, மேட்டூர் அணை, திப்பம்பட்டி காவிரியாற்றில் நீராடி வழிபாடு செய்தனர். மேட்டூர் காவிரியாறு, பண்ணவாடி, கோட்டையூர் நீர்பரப்பு பகுதியிலும் பக்தர்கள் புனித நீராடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !