திருப்பதி பிரம்மோற்சவம் 4ம் நாள்: கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி உலா
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று(செப்.26) உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார்.
திருமலை திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை செப்டம்பர் 27ம் தேதியும், தேரோட்டம் 30ம் தேதியும் நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறவுள்ளது. விழாவின் 4ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். சுவாமி ஊர்வலத்திற்கு முன் சிவனடியார் வேடத்தில் மாட வீதிகளில் அகோரிகள் போல வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் நடனமாடி வந்தனர். சோலாப்பூர் மாணவியர் பதினைந்து கிலோ எடையுள்ள டிரம்மை தூக்கி இசைத்த படி ஆடி வந்தனர்,