உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி நவராத்திரி விழா: பரதநாட்டிய மாணவியர் அசத்தல்

பொள்ளாச்சி நவராத்திரி விழா: பரதநாட்டிய மாணவியர் அசத்தல்

பொள்ளாச்சி: நவராத்திரி விழாவையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். விழாவையொட்டி, வாசவி மகாலில் தினமும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நேற்று முன்தினம் தியாகராஜர் இசை மையம் தியான் செந்திலின் மாணவியர் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. நவரச நாட்டியாலயா பள்ளி ஆசிரியர் கீதா பிரகாஷின் மாணவியரின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. ‘மகாகணபதி, உன்னை காணாத, சிவதாண்டவம், ஐயப்பன்’ பாடலுக்கு மாணவியரின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. புளியம்பட்டி மாரியம்மன் கோவில், நவராத்திரி விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !