உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமை, ஆடு பலியிட்டு மழை வேண்டி வழிபாடு

எருமை, ஆடு பலியிட்டு மழை வேண்டி வழிபாடு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மெய்யூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, புரட்டாசி மாதம், குலதெய்வமான காளியம்மனுக்கு எருமை, ஆடுகளை பலியிட்டு வழிபாடு செய்வது வழக்கம். இந்நிகழ்ச்சியில், அவர்களது உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வர். மற்றவர்களுக்கு அனுமதியில்லை. இந்நிலையில், நரிக்குறவர் இன மக்கள் நடத்திய வழிபாட்டில், ஆறு எருமை மாடுகள், ஆறு ஆடுகளை பலியிட்டு அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டால், ஒரு வாரத்திற்குள் கனமழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !