உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியசாமி அய்யனார் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பின் புரவி எடுப்பு விழா

அரியசாமி அய்யனார் கோயிலில் 60 ஆண்டுகளுக்குப் பின் புரவி எடுப்பு விழா

நரிக்குடி: நரிக்குடி அருகே 60 ஆண்டுகளுக்குப் பின் அரியசாமி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. நரிக்குடி   என்.பள்ளபட்டியில் அரியசுவாமி கோயில், நரிக்குடியில் அய்யனார் கோயில் உள்ளது.  இங்கு 60  ஆண்டுகளுக்கு முன்பு புரவி எடுப்பு திருவிழா நடந்த நிலையில்,இந்தாண்டு இருநாட்களாக விழா நடந்தது. இதில் 14 புரவிகள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.  முதல் நாளில் கிராமத்தினர்  வீடுகள் தோறும்   மண்பானையில் சமைத்து, சட்டிச் சோறு கட்டி நரிக்குடி ஸ்ரீ அழகியமீனாள் கோயிலில் படைத்தனர்.  அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மறு நாள் அரியசுவாமி கோயிலில் பூஜை செய்து, புரவி எடுக்கப்பட்டு ஊர்வலமாக நரிக்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் கொண்டு சேர்க்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !