முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் நிறைவு
ADDED :2986 days ago
வாலாஜாபாத்: முத்தாலம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவ விழா நிறைவடைந்தது. வாலாஜாபாத் அருந்ததியர் தெருவில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் நடைபெறும். நடப்பாண்டு நவராத்திரி விழா கடந்த, 21ம் தேதி துவங்கியது. நிறைவு நாளான நேற்று முன் தினம் இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவ – மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.