பட்டாளம்மன் கோவில் தேர் வீதி உலா
ADDED :2925 days ago
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை ஏரித் தெருவில் உள்ள பட்டாளம்மன் கோவிலில், தசரா திருவிழாவை முன்னிட்டு தேர் வீதி உலா வந்தது. இங்கு வீரவண்ணார் சலவை தொழிலாளர்கள் சார்பில், பட்டாளம்மன் பல்லக்கு, மேள, தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. இதில், பெண்கள் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின், அம்மன் கோவில் வந்தடைந்தும் அங்கு சிறப்பு பூஜை நடந்தது.