புனித ஜெப மாலை மாதா கோவில் விழா
ADDED :2919 days ago
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், புனித ஜெப மாலை மாதா கோவில், தேர் திருவிழா கொடியேற்ற விழா நடந்தது. குமாரபாளையம், நடராஜா நகரில், புனித ஜெப மாலை மாதா கோவில் அலங்கார தேர் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 1ல் திருப்பலி, ஜெபமாலை மற்றும் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக முக்கிய வீதிகளின் வழியாக சிலுவை ஊர்வலம் நடந்தது. பாதிரியார் பிரான்சிஸ் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். கடந்த, 2 முதல், நாள்தோறும் மாலை, ஜெபமாலை, திருப்பலி நடந்தது. சார்லஸ், விக்டர், கோபி இம்மானுவேல், டேவிட் உள்ளிட்ட சான்றோர்கள் பங்கேற்றனர். நேற்று, தேர்பவனி நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாதா வருகை புரிந்தார். சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் துவக்கி வைத்தார். கோவில் வளாகத்தில் புறப்பட்ட தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.