கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
ADDED :5156 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்த மாதம் தீபத் திருவிழா என்பதால், கூடுதலான பக்தர்கள் கிரிவம் செல்வர். இதனால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் வெளிநாட்டினர் கலந்து கொள்வர். பவுர்ணமி கிரிவலம் வர வரும், 9ம் தேதி இரவு, 7.21 முதல், மறு நாள்,10ம் தேதி இரவு, 8.43 மணி வரை உகந்த நேரம் என, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.