அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
ஆத்தூர்: ஐப்பசி அமாவாசை முன்னிட்டு, ஆத்தூரில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன், பெரியநாயகி, முத்தையா கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மதுரகாளியம்மன், பெரிய நாயகி அம்மன் சுவாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதேபோல், தலைவாசல் அருகே, ஆறகளூரில் உள்ள அம்பாயிரம்மன், காமநாதீஸ்வரர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
* இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. காளியம்மன் கோவிலில், இனிப்பு வகைகளால் அலங்கரிக்கப்பட்ட அஷ்டலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் அம்மன், மாரியம்மன் கோவிலில், சகல நோயை தீர்க்கும் நந்தா விளக்கு சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்தனர்.