உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமண சுவாமிக்கு திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

வெங்கட்ரமண சுவாமிக்கு திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

ஓமலூர்: திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர், காருவள்ளி, சின்னதிருப்பதி, வெங்கட்ரமணர் கோவிலில், புரட்டாசி திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்வசவருக்கு திருமஞ்சனம், மலர் உள்ளிட்ட பல்வேறு அபி ?ஷகம் நடந்தது. கல்யாண சீர்வரிசை பொருட்களுடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர், கல்யாண கோலத்தில், திரளான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வடக்கு, தெற்கு புற மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், திருக்கல்யாண நிகழ்ச்சியை காண திரண்டதால், கோவில் உட்புறம், பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் கூறுகையில், பக்தர்கள், தடுப்பை மீறி, சுவாமியை தரிசிக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது, என்றார். இன்று தேரோட்டம்: புரட்டாசி மாத தேரோட்டம், இன்று மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர் என்பதால், காருவள்ளி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 15 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !