ராமநாதபுரம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி வழிபாடு
ADDED :2906 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் வெள்ளி கவச அலங்காரத்தில் முருக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். இதேபோல், ராமநாதாபுரம் குண்டுக்கரை சுவாமி நாத சுவாமி கோயிலில் முருக பெருமான் ராஜ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.