விருதுநகர் கல்லறை திருநாள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
ADDED :2925 days ago
விருதுநகர் கல்லறை திருநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
கல்லறை திருநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் கல்லறைகளில் முன்னோர்களை வழிப்பட்டு கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
விருதுநகரில் புதுபஸ்ஸ்டாண்ட் பனைநகர் மற்றும் சாத்தூர் ரோட்டில் உள்ள கல்லறைகளிலும் பிரார்த்தனை நடந்தது.
இது போல் சாத்தூர் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியார் ஆம்புரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னோர்களை நினைத்து பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.