சாய்பாபா பாதுகை பக்தர்கள் தரிசனம்
ADDED :2964 days ago
மாமல்லபுரம்: சாய்பாபா பாதுகை, கடலோர சாலை வழியே கடந்து, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். ஷீரடி சாய்பாபா முக்தி பெற்ற நுாற்றாண்டை முன்னிட்டு, அவரது பாதம் தாங்கிய பாதுகை, பக்தர்கள் தரிசனத்திற்காக, ரத யாத்திரையாக வந்துள்ளது. கடந்த மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு அக்டோபர் வரை, நாடு முழுவதும் செல்கிறது.தமிழகம் வந்த பாதுகை, மாமல்லபுரம் அடுத்த, கிருஷ்ணன்காரணை சாய்பாபா கோவிலுக்கு நேற்று வந்தது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, அதை பக்தர்கள் தரிசித்து வணங்கினர். தொடர்ந்து, கடலோர சாலை வழியே, புதுச்சேரி சென்றது.