மரக்காணத்தில் பிதோஷ வழிபாடு
ADDED :2989 days ago
மரக்காணம்: மரக்காணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மரக்காணம் பூமிஸ்வரன் கோவில், முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில் மற்றும் பெருமுக்கல் முத்தியாஜல ஈஸ்வரன் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு, கோவில் வளாகத்திலுள்ள சிவ பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது.