உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, ஐயப்பன், மஞ்சள் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. சபரிமலை செல்வதற்கு விரதமிருக்கும் பக்தர்கள், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தை சுற்றி வந்து, குருசாமிகளிடம் மாலை அணிந்தனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், கார்த்திகை முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில்களில், ஐயப்பபக்தர்கள் அதிகாலையில் மாலை அணிந்தனர்.-- நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !