திருத்தளிநாதர் கோயிலில் சம்பகசஷ்டி உற்ஸவம் துவக்கம்
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு சம்பகசஷ்டி உற்ஸவம் நேற்று துவங்கியது. இக்கோயிலில் தவக்கோலத்தில்யோகபைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். காஞ்சி பெரியவர் சுவாமிகளால் வழிபாடு நடத்தி மேருபீடம் சிறப்பு பெற்றது. இந்திரன் மகன் ஜெயந்தனுக்கு பாப விமோசனம் அளித்த பைரவருக்கு ஜெயந்தன் விழாவை அடுத்து கார்த்திகை மாதத்தில் மகா சம்பக சஷ்டி உற்சவம் நடைபெறுகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு பைரவர் சன்னதி ேஹாம குண்டத்தில்குருக்கள்கள் பாஸ்கரன், ரமேஷ், கணேஷ் உள்ளிட்ட எட்டு சிவாச்சாரியர்களால்அஷ்ட பைரவர் யாகம் துவங்கியது. தொடர்ந்து மதியம் 12:00 மணி அளவில் பூர்ணாகுதியும், பகல் 1:00 மணிஅளவில் மூலவர் பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கும்,மாலை 4.30 மணிக்கும் அஷ்டபைரவர் யாகம் துவங்கும்.