உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா ஜெயந்தி: பக்தி இசை நிகழ்ச்சி

சாய்பாபா ஜெயந்தி: பக்தி இசை நிகழ்ச்சி

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி வெங்கடேசா காலனி சாய் மதுரம் கோவிலில், சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  விழாவையொட்டி, தினமும் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. நேற்றுமுன்தினம், மாலை, 5:30 மணிக்கு  வீரேஸ்வரன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.அதில், சாய்பாபா பாடல்கள் பாடப்பட்டன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து,  இன்று மாலை, 6:00 மணிக்கு பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சத்ய சாய் சேவா சமிதியினர் செய்து  வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !