நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2981 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ரத்தினம் தெரு விநாயகர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. நெல்லிக்குப்பம் ரத்தினம் தெரு விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கும் சரஸ்வதிக்கும் தனித்தனியாக கோவில் கட்டி கும்பாபிஷேக விழா நேற்று யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. காலை யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹீதி தீபாரதனையும் நடந்தது.காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடாகி 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை முருகன், முருகானந்தம் குருக்கள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.