கார்த்திகை தீப விழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உலா
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவில் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பத்தாம் நாளில் 2668, அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்கான ராட்சத கொப்பரை சீரமைப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஏழாம் நாளில் நடைபெறவுள்ள தேரோட்டத்தையொட்டி, தேர்களுக்கு கலசங்கள் பொருத்தும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுப்பட்டனர். தீப விழாவை முன்னிட்டு அரசு சார்பில் நடந்த பொருட்காட்சி அரங்கத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடிய குழவினர். கார்த்திகை தீப விழாவில் ஐந்தாம் நாள் காலை உற்சவத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.