பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு விழா துவக்கம்
ADDED :3217 days ago
விழுப்புரம் : விழுப்புரம் நாப்பாளைய தெருவில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருவிழா துவங்கியது.புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு பெருவிழாவை யொட்டி, கொடி பவனி நடந்தது. பின், ஆலய வளாகத்தில் கொடியேற்றி, திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து தினந்தோறும் தேர்பவனி, திருப்பலிகளும், வரும் 2ம்தேதி சிறப்பு தியானம், 3ம் தேதி ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.