செம்பை சங்கீத உற்ஸவம்: குருவாயூரில் இன்று நிறைவு
ADDED :2879 days ago
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், செம்பை சங்கீத உற்ஸவம் இன்று நிறைவடைகிறது. கேரளா, குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில், செம்பை சங்கீத உற்ஸவம் நவ.16ல் துவங்கியது. தேவஸ்தானம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் துவக்கி வைத்தார். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் நடந்தன. உற்ஸவத்தின் சிறப்பு அம்சமான பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கும் நிகழ்ச்சி, நேற்று காலை 9:30 முதல் 10:30 மணி வரை நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று பாடிய கீர்த்தனங்களை, ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர்.செம்பை சங்கீத உற்ஸவம், இன்று நிறைவடைகிறது.