நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசலுக்கு புதிய படிக்கட்டுகள்
ADDED :2882 days ago
நாமக்கல்: நாமக்கல், அரங்கநாதர் திருக்கோவிலில், கார்க்கோடகன் என்னும் பாம்பின் மீது, அனந்த சயன நிலையில் சுவாமி காட்சியளிக்கிறார். வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் வழியாக, பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அந்த படிக்கட்டுகள் உயரமாக இருப்பதால், வயதான பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தொல்பொருள் துறையினரின் அனுமதியோடு, உயரமான படிகள் அகற்றப்பட்டு, குறைந்த உயரம் கொண்ட படிகள், உபயதாரர் மூலம், 1.25 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டன. அதற்கு, பட்டாச்சாரியார்கள் பூஜை செய்தனர். உதவி ஆணையர் ரமேஷ், பக்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.