பனமரத்துப்பட்டி கோவில் விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
ADDED :2885 days ago
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, வாழக்குட்டப்பட்டி கிராமத்தில், சித்திவிநாயகர், சின்னமாரியம்மன் கோவில், கும்பாபிஷேகம், இன்று காலை, 9:00 மணிக்கு நடக்கிறது. நேற்று, காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. மல்லூர் வெங்கடேச பெருமாள் கோவிலில் இருந்து, யானை, குதிரை ஊர்வலத்துடன் காவேரி தீர்த்தம் வேங்காம்பட்டி வழியாக கோவிலுக்கு புறப்பட்டது. அதில், 300க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம், முளைப்பாரி எடுத்து சென்றனர். கோ பூஜை, வர்ண பூஜை, கோபுரத்திற்கு கலசம் வைத்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.