பட்டத்தரசி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2918 days ago
பவானி: பவானி, பழனிபுரம் பட்டத்தரசி அம்மன், பால விநாயகர், பால முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கடந்த, 23ல் கால்கோல் விழா, யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. 26ல், விநாயகர் வழிபாடு, கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. 27ல், மங்கள இசையுடன், வாஸ்து சாந்தி, நேற்று காலை, 6:20 மணிக்கு கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானங்களில் புனித நீர் ஊற்றி, சிறப்பு அலங்காரத்தில் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.