காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம்
ADDED :2866 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நடக்கிறது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் புஸ்யாஹவாசனம், வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது. நேற்று 9.00 மணிக்கு புண்யாஹவாசனம், பவித்ரா பிரதிஷ்டை,கும்ப பூஜை, சக்கரத்தாழ்வார், ஆவாஹனம், பூர்ணாஹூதி நடந்தது. ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பவித்ர உற்சவத்தையொட்டி, தினசரி மாலை 5:00 மணிக்கு பெருமாள் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை நித்யகல்யாண பெருமாள் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினர் செய்துள்ளனர்.