உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம்பட்டியில் 3 கோயில்கள் கும்பாபிஷேகம்

உலகம்பட்டியில் 3 கோயில்கள் கும்பாபிஷேகம்

சிங்கம்புணரி, சிங்கம்புணரி அருகே எஸ்.புதுார் ஒன்றியம் உலகம்பட்டியில் பழமை வாய்ந்த 3 கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இங்குள்ள விநாயகர் கோயில், உலகநாயகி உடனுறை உலகநாத சுவாமி கோயில், ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோயில் ஆகியவற்றில் திருப்பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து நவ.28ல் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று இக்கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:30 மணியளவில் விநாயகர் கோயிலிலும், 9:30 மணியளவில் உலகநாத சுவாமி கோயிலிலும், 10:40 மணியளவில் ஞானியார் மடம் தண்டாயுதபாணி கோயிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. தேவகோட்டை ராமநாதன் குழுவினர் வர்ணனை செய்தனர். விழாவில் நகரத்தார் தலைவர் பாண்டியன், செயலாளர் சுப்பையா, பொருளாளர் மீனாட்சிசுந்தரம், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், திருப்பத்துார் எம்.எல்.ஏ., பெரியகருப்பன், ஆந்திரா மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி., கிஷோர்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !