திட்டை குரு கோவிலில் இன்று விமான பாலாலயம்
ADDED :5100 days ago
தஞ்சாவூர் : தஞ்சாவூர் அடுத்த தென்குடி திட்டை வஷிஸ்டேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறந்து விளங்குவதாகும். இங்கு நவக்கிரகங்களில் சுபகிரகமான குரு பகவான் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இக்கோவில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு இன்று 15 தேதி வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு மேல் பத்து மணிக்குள் விமான பாலஸ்தாபன விழா நடக்கிறது.இதில் பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என செயல்அலுவலர் கோவிந்தராஜ், தக்கார் ஜெயபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.