திருக்கழுக்குன்றத்தில் சைவ சித்தாந்த பயிற்சி
ADDED :2863 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்று வந்த சைவ சித்தாந்த பயிற்சியின் நிறைவு விழா, நேற்று நடந்தது.திருக்கழுக்குன்றம், நால்வர் கோவில் பகுதியில், திருவாடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பயிற்சி, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பகுதியைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேற்கண்ட பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடந்தது. இப்பயிற்சி முடித்தவர்களுக்கு, ’சித்தாந்த ரத்தினம்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.சித்தாந்த ரத்தினம் சம்பத் தலைமை வகித்தார்.நடராஜன் வரவேற்புரை வழங்கினார். விழா நிறைவில், வீணை இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.