உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்குடன் சிறப்பு பூஜை

சிம்மபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்குடன் சிறப்பு பூஜை

கிருஷ்ணராயபுரம்: கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், கார்த்திகை மாத நான்காவது வார சோமவாரம் விழா முன்னிட்டு, 108 சங்கு அபிஷேக பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர் சிவன் கோவிலில், கார்த்திகை மாதம் சோமவாரம் விழா கொண்டாடப்படுகிறது. இதன் படி, நான்காவது சோமவாரமான (திங்கட்கிழமை) நேற்று காலை, சுவாமிக்கு, 108 சங்கு வைத்து, சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடந்தது. இதில், லாலாப்பேட்டை, கருப்பத்தூர், திம்மாச்சிபுரம், வல்லம், மகாதானபுரம் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !