கீழவளவு வீரகாளியம்மன் கோயில் பூத்தட்டு திருவிழா
ADDED :2957 days ago
மேலூர்: மேலூர் அருகே கீழவளவு வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்றுமாலை பூத்தட்டு திருவிழா நடந்தது. இதில் கீழையூர், கீழவளவு, சருகுவலையபட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர். இரண்டு நாட்கள் நடக்கும் இவ்விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் அம்மன் தேரில் உலா வந்து அருள்பாலித்தார். நேற்று பக்தர்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீரகாளியம்மன் எழுந்தருளினர். முன்னதாக 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.