சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் கார்த்திகை திருவிளக்கு பூஜை
ADDED :2943 days ago
சிவகாசி : சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் கார்த்திகை சிறப்பு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மங்கலபூஜைகள் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன், உற்சவர் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். பட்டர் கார்த்திகேயன் தலைமையில் பூஜைகள் நடந்தன. தலைவர் ரவீந்திரன் ஏற்பாடுகளை செய்தார்.