உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்- 2 ஏழைகளுக்கு உதவுவோம்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்- 2 ஏழைகளுக்கு உதவுவோம்

ஒரு நீக்ரோ தம்பதியின் மகன் வாஷிங்டன் கார்வர். நீக்ரோக்களை வெள்ளையர்கள் அடிமை ப்படுத்தி இருந்தனர். ஒருமுறை, கார்வரின் பெற்றோரை குழந்தையுடன் கைது செய்தனர். குதிரையில் அவர்களை ஏற்றிச் செல்லும் போது, குழந்தை தவறி விழுந்து விட்டது. வெள்ளை யர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் பெற்றோரை இழுத்துச் சென்று விட்டனர்.

அந்த குழந்தையை ஒருவர் துக்கிச் சென்றார். நன்றாக படிக்க வைத்தார். தாவர ஆராய்ச்சியில் கார்வர் சிறந்தவராக திகழ்ந்தார். நீக்ரோ என்பதால் அவரது கண்டுபிடிப்புகள் புறக்கணிக்கப் பட்டன. அந்த சமயத்தில் அமெரிக்காவில் பருத்தி தோட்டங்களை பூச்சிகள் பாழ்படுத்தி பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது கார்வரின் கண்களில் ஒரு பட்டாணி தென்பட்டது. பட்டாணியைக் கொண்டு 15 விதமான பொருட்களை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டு பிடித்தார். இதைக் கண்ட உலக  விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர். கார்வரின் புகழ் உலகெ ங்கும் பரவியது. மக்களின் பசியும் தீர்ந்தது.

அவர்(ஆண்டவர்) சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து
உயர்த்துகிறார். அவர்களை பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தை
சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் என்கிறது பைபிள். அனாதைகளை பாதுகாத்து உயர்த்த
வேண்டும் என்பது இன்றைய சிந்தனை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !