உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் வரும், 19ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்

திருப்பூரில் வரும், 19ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்

திருப்பூர்:சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருப்பூரில் சிறப்பு யாகத்துக்கு, ஜோதிடர் ராஜா குழுவினர் வரும், 19ம் தேதி ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஜோதிடர் ராஜா கூறுகையில், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. இதையடுத்து வரும் 19ம் தேதி திருப்பூர் பழைய பஸ் நிலையம் பின், உள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், யாகம், வேத சிவாகம முறைப்படி நடக்கிறது.
விருச்சிகம், தனுசு, மகரம், ரிஷபம், மிதுனம் மற்றும் கன்னி ராசியினர் சனிபகவானை வழிபட்டு, பரிகாரம் செய்து கொள்ளலாம். மற்ற ராசியினரும் பங்கேற்கலாம். விவரங்களுக்கு, 98422 12499, 99941 02895 என்ற எண்களில் அழைக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !