நாளை சனிப்பெயர்ச்சி: திருநள்ளாரில் குவியும் பக்தர்கள்
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் உலக பிரசித்தி பெற்றது. நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் தினம் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரம் கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.
இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா 2 அரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.இந்தாண்டு வரும் டிச.19ம் தேதி சனிப்பெயர்ச்சிவிழா விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதனால் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்து சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.கடந்த சனிக்கிழமையில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும் தினம் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துவருகின்றனர்.சனிப்பெயர்ச்சி வரும் நிலையில் தினம் அதிகம் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். நேற்று சனிக்கிழமை என்பதால் சுமார் 1லட்சம் பக்தர்கள் அதிகாலையில் நளம்குளத்தில் நீராடி விட்டு தெற்கு,வடக்கு விதியில் உள்ள வரிசைமூலம் சனிஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.மேலும் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் குடிநீர், பிஸ்கட், உணவுபிரசாதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்செய்துள்ளனர்.இதனால் பக்தர்கள் பலமணிநேரம் காத்திருந்து அமைதியாக தரிசனம் செய்தனர்.நளம்குளம்,கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 100க்கு மேற்பட்ட போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.