உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

திண்டுக்கல் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் மலையடிவாரம் ஆஞ்சநேயர் கோயில், தெற்கு தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், வடை மாலை, வெற்றிலை மற்றும் பழங்கள் மாலை அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. பழநி பாலாறு-–பொருந்தலாறு அணை வீர ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வடை மாலைசாத்தி சிறப்புபூஜையுடன் மகாதீபாராதனை நடந்தது. பொங்கல், புளியோதரை பிரசாதமாக, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !