உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 30ம் ஆண்டு மார்கழி இசை விழா கோதண்டராமர் கோவிலில் துவக்கம்

30ம் ஆண்டு மார்கழி இசை விழா கோதண்டராமர் கோவிலில் துவக்கம்

சென்னை : வண்ணாரப்பேட்டையில் உள்ள, பிரசித்த பெற்ற கோதண்டராமர் கோவிலில், 30ம் ஆண்டு மார்கழி, ’தெய்வத் தமிழ் இசை விழா’ நேற்று துவங்கியது.சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள கோதண்டராமர் கோவிலில், 30ம் ஆண்டு மார்கழி, ’தெய்வத் தமிழ் இசை விழா’ 30 நாட்களுக்கு நடக்க உள்ளது. நேற்று நடந்த இதன் துவக்க விழாவில், டாக்டர் தனலட்சுமி மகாலிங்கம், குத்துவிளக்கு ஏற்றினார். இதில், காஞ்சி காமகோடி பீட நாதஸ்வர வித்வான், ஏ.என்.பாலமுருகன் குழுவினரின், இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற, பா.ஜ., - எம்.பி., இல.கணேசன், ’நாதஸ்வர கலாநிதி’ என்ற விருதை, நாதஸ்வர வித்வான், ஏ.என்.பாலமுருகனுக்கு வழங்கினார். இல.கணேசன் பேசியதாவது: மார்கழி மாதம், 1ம் தேதி துவங்கினாலே, பேச்சாளர்கள் பேச வேண்டும்; சொற்பொழிவு நடக்க வேண்டும் என்ற நிலை தற்போது உள்ளது. ஆனால் முன்பு, தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை உள்ளிட்டவை, இந்த மாதத்தில் பாடப்பட்டன. பின், காலப்போக்கில், சொற்பொழிவுகள் நடத்தப் பட்டன. பக்தி இலக்கியப் பாடல்கள் பாடப் பெற்ற கோவில்களில், தற்போது, சினிமா பாடல்களை இசைக்கின்றனர். இதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !