பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் மண்டல பூஜை
ADDED :2891 days ago
பழநி : பழநியில் தைப்பூச விழாநடைபெறும் பெரியநாயகியம்மன் கோயிலில் 19 ஆண்டுகளுக்குபின் கடந்த நவ.,24ல் கும்பாபிேஷகமும், கைலாசநாதர், பெரியநாயகியம்மனுக்கும் மற்றும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணமும் நடந்தது. இதனைத் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. விரைவில் திருவாதிரை, தைப்பூசம் விழா வரஉள்ளது. இதன் காரணமாக நேற்று மண்டல பூஜை நிறைவிழா நடந்தது. கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜையுடன், கைலாசநாதர், பெரியநாயகியம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புஅபிேஷகம், தீபாராதனை நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் முருகேசன் பங்கேற்றனர்.