சனிப்பெயர்ச்சி: சென்னை கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED :2891 days ago
சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னை, திருவள்ளுர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவள்ளுர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சனீஸ்வர பகவான் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர், சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, தி.நகர் வடதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் நீலாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் எள் விளக்கேற்றி வழிபட்டனர்.