உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சச்சிதானந்த சுவாமிகள் மதுரை வருகை

சச்சிதானந்த சுவாமிகள் மதுரை வருகை

மதுரை : மதுரை நிகழ்ச்சிகளில் பங்கேற்க கர்நாடகமாநிலம் ஹரிஹரபுரம் ஸ்ரீ மடத்தின் பீடாதிபதி சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார். விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் சங்கர சீத்தாராமன் தலைமையில் பூர்ணகும்பம் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டாள்புரம் வசுதாரா யாகசாலையில் உலக நன்மைக்கான ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜையும், சுவாமிகள் தரிசனமும் நடந்தது. இன்று (டிச.,19) காலை 10:30 மணிக்கு சுவாமிகள் தரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்குகிறார். மாலை 5:30 மணிக்கு ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜை, சுவாமிகள் தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !