உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏழரை அடியில் சனி பகவான் சிலை

ஏழரை அடியில் சனி பகவான் சிலை

கோவை: புலியகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, ஏழரை அடி உயரமுள்ள சனிபகவானுக்கு, பக்தர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.சனீஸ்வர பகவானுக்கு பிடித்தமான உலோகம் இரும்பு. புலியகுளத்தை சேர்ந்த திருமுடி ராஜேந்திரன் என்பவர், 1,500 கிலோ இரும்பில், 7.5 அடி உயரத்திலான சனீஸ்வர பகவானை உருவாக்கி, புலிகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்தார். சனீஸ்வர பகவானின் வாகனமான காக்கை, 400 கிலோ எடையில் உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருமுடி ராஜேந்திரன் கூறுகையில், ”டிச., 19ல் (இன்று) சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. புலியகுளம் மாரியம்மன் கோவில் வளாகத்திலுள்ள லோகநாயக சனீஸ்வர பகவானுக்கு, காலை 5:30 மணிக்கு அபிஷகேம் துவங்குகிறது. காலை 9:49 மணிக்கு சனிபகவான் பெயர்ச்சியடைகிறார். ”பக்தர்கள் தங்களது கரங்களால், சனீஸ்வரனுக்கு, நல்லெண்ணெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !