அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி விழா
ADDED :2886 days ago
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு சனிபகவானுக்கு புஷ்பார்ச்சனை நடந்தது. அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் உல்பிரகாரத்தில் சனிபகவான் ஒருகாலை துாக்கியவாறு காக்கை வாகனத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிபகவான் விருச்சிக ராசில் இருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வதையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு விசேஷ மகா அபிஷகம் பரிகார பூஜைகள் புஷ்பார்ச்சனை விசேஷ ஹாமங்கள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு கிரகமகாசாந்தி மகா அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.