மணமக்களை வாழ்த்தும் போது அக் ஷதை இடுவதின் நோக்கம் என்ன?
ADDED :2882 days ago
அக்ஷதை என்பதை அ+க்ஷதா என்று பிரித்து பொருள் காண வேண்டும். க்ஷதா என்றால் அழிதல் அல்லது குறைதல்.. அ என்பதுடன் சேர்த்து சொல்ல இல்லாதது என பொருள் தரும். அதாவது அழிவில்லாதது, குறைவில்லாதது என்று பொருள். குறைவின்றி நீண்ட ஆயுளுடன் மணமக்கள் வாழ அக்ஷதையிட்டு வாழ்த்துகின்றனர்.