அனுமன் பெயர்க்காரணம்
ADDED :2896 days ago
குழந்தையாக இருந்த போது, அனுமன் சூரியன் உதயமாவதை பார்த்து, அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும் அதைப் பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்டு ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்துக் கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை, ஹனு என்பர். எனவே அவர் ஹனுமான் ஆனார். தமிழில் அனுமன் என்கிறோம்.