நெற்றிக்கண் ஆஞ்சநேயர்
ரக்த பிந்து, ரக்த ராட்சசன் என்னும் இரு அரக்கர்களை அழிப்பதற்காக ராமன் அனுமனை அனுப்பி வைத்தார். அப்போது, தேவர்களும் அவரை வாழ்த்தி வழியனுப்பினர். திருமால் தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தையும், பிரம்மா கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ராமன் வில்லம்பையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும், கருடாழ்வார் தன் இரு சிறகு களையும் தந்து வாழ்த்தினர். தாமதமாக வந்த சிவபெருமான், அனுமனுக்கு தன்னுடைய நெற்றிக்கண்ணையே தந்தார். அனுமன் அவ்விரு அரக்கர்களையும் அழித்து விட்டு வெற்றிக்களிப்பில் ஆனந்தமாக ஓரிடத்தில் தங்கி இளைப்பாறினார். அவ்விடமே ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு பின் அனந்தமங்கலம் ஆனது. இங்கு கோயில் கொண்டிருக்கும் அனுமனுக்கு, மூன்று கண்கள், பத்து கைகள் உள்ளன. திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ளது.