உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை அய்யப்பனுக்கு ஐந்து நாள் சந்தன அபிஷேகம்!

சபரிமலை அய்யப்பனுக்கு ஐந்து நாள் சந்தன அபிஷேகம்!

சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் மூல விக்கிரகத்தை குளிர்விக்க, ஐந்து நாட்கள் சந்தன அபிஷேகம் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலையில் திரண்டு வருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் நெய்யினால் தினமும், அய்யப்பனுக்கு பலமுறை அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இதனால், மூல விக்கிரகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்படும். இதற்காக தொடர்ந்து சந்தன அபிஷேகம் செய்விக்கப்படுவது வழக்கம். அதேபோல், தற்போது மூல விக்கிரகத்திற்கு சந்தன அபிஷேகம் செய்விக்கும் நிகழ்ச்சி, நேற்று பிற்பகல் உச்சிக்கால பூஜையின் போது துவங்கியது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி அபிஷேகம் செய்வித்தார். அபிஷேகத்தைத் தொடர்ந்து, சகஸ்ர கலசாபிஷேகமும் செய்விக்கப்படும். இந்நிகழ்ச்சி, ஐந்து நாட்கள் செய்விக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !