ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: ரத்தின அபய ஹஸ்தம் அணிந்து நம்பெருமாள் சேவை
ADDED :3156 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் பகல் பத்து உற்சவத்தின் ஐந்தாம் நாளில், சவுரி கொண்டை, ரத்தின அபய ஹஸ்தம், மார்பில் விமான பதக்கம், முத்துமாலை, கையில் தங்க தாழம் பூ உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.